Wednesday, August 27, 2008

போராடும் பேனா போராளிகள்!

""எழுத்தாளர்கள், பத்திகையாளர்கள் தெற்காசிய நாடுகளில் தீவிரவாதிகளைப் போல் கருதப்படுகிறார்கள். ஆட்சியாளர்கள், அரசியல் தலைவர்களின் குறைகளை எழுதுவதால், பேனா போராளிகள் மீது அடக்குமுறை, நெருக்கடி, அச்சுறுத்தல் வந்து கொண்டிருக்கின்றன'', என்கிற கருத்து புலனாய்வுப் பத்திகையாளர்களிடம் நிலவுகிறது. சுதந்திரமாக செயல்படும் பத்திகையாளர்கள் இதனால் பெய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலை குறித்து அண்மையில் கொழும்பில் நடைபெற்ற தெற்காசிய ஊடகவியலாளர் மாநாட்டில் கவலை தெவிக்கப்பட்டது. இந்தியாவின் மூத்த பத்திகையாளர்கள் கே.கே. கட்யால், நிகில் சிங், வினோத் சர்மா, பாகிஸ்தான் மூத்த பத்திகையாளர் இம்தியாஸ் ஆலம், இலங்கை முன்னணி பத்திகையாளர்கள் அமீன், லட்சுமண் குணசேகர, சர்மிணி எனப் பலர் பங்கேற்றனர். தெற்காசிய நாடுகளில், குறிப்பாக நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் பத்திகையாளர்கள் மத்தளம் போல் ஆட்சியாளர்கள், எதிர்ப்பாளர்கள் என இரு தரப்பினன் நெருக்குதல்களுக்கு ஆளாகி வருகிறார்கள். தெற்காசிய நாடுகளின் மண்டல ஒத்துழைப்பு அமைப்பு (சார்க்) உச்சி மாநாட்டுக்கு முன்னதாக நடைபெற்ற இந்த மாநாட்டுக்கு தெற்காசிய சுதந்திர ஊடகவியலாளர் சங்கம் (சாஃப்மா), தெற்காசிய ஊடக ஆணையம் ஆகியவை ஏற்பாடு செய்திருந்தன. "பத்திகையாளர்களின் பாதுகாப்பு' என்பதே மாநாட்டின் மையக் கருத்து. சுதந்திரமாக கருத்துகளைச் சேகத்தல், எழுதுதல், தகவல் அறியும் உமை, பத்திகையாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பு ஆகியவை குறித்தும் குழு அமர்வுகளில் விவாக விவாதிக்கப்பட்டது. கொந்தளிக்கும் சூழல்களில் பத்திகையாளர்கள் செய்தி சேகத்து வெளியிடுவதில் உள்ள இடர்ப்பாடுகள், அச்சுறுத்தல்கள் குறித்து கவலை தெவிக்கப்பட்டது. தகவல் அறியும் உமை தெற்காசிய நாடுகளில் எந்த அளவில் உள்ளது என்பதை விவாக அந்தந்த நாட்டுப் பத்திகையாளர்கள் விளக்கினர். ஆப்கானிஸ்தான், மாலத்தீவுகள் ஆகிய நாடுகளில் இது குறித்த சட்டமே இல்லை. வங்க தேசம், பூடான், இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளில் தகவல் அறியும் உமை குறித்து திட்டம் உள்ளது; ஆனால், சட்டம் உருவாகவில்லை. இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் இச்சட்டம் உருவாகியுள்ளது. எனினும், இன்னும் தீவிரமாகச் செயலுக்கு வரவேண்டும் என்று கருத்து தெவிக்கப்பட்டது. மாநாட்டில் நேபாளத்தில் பத்திகையாளர்களின் நிலைமை குறித்த ஆய்வுக் கட்டுரை வழங்க வந்த கிஷோர் ஷ்ரேஸ்தா கையில் கட்டுப் போடப்பட்டிருந்தது. ""இது இந்த மாநாட்டுக்கு வருவதற்கு இரு தினங்களுக்கு முன் கிடைத்த பசு'' என்று வேதனையுடன் காட்டினார். பத்திகையாளர்கள் மீதான தாக்குதல், காட்டுமிராண்டித்தனமாக இருப்பதை அவர் உருக்கமாக விவத்தார். நேபாளத்தில் மன்னராட்சிக் காலத்திலும் இப்போதும் தாக்குதல் தொடர்கிறது என்றும், மாவோ தீவிரவாதிகளும் இதற்கு விதி விலக்கல்ல என்றும் தெவித்தார் அவர். சில அரசியல் கட்டுரைகளை வெளியிட்டதற்காக நேபாளத்தின் பெய தேசிய நாளேடுகள் நிறுத்தப்பட்டன. பிரேந்திர ஷா என்ற பத்திகையாளர் கடத்தப்பட்டு, சில தினங்களில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்; பிரகாஷ் சிங் தாக்கு என்ற பத்திகையாளன் கதி தெயவில்லை என்றார் அவர். கடந்த ஆண்டு பத்திகையாளர்களுக்கு எதிராக 575 சம்பவங்கள் நடைபெற்றன. ""எத்தனை அடக்குமுறைகள் இருந்தாலும் நேபாளத்தில் பத்திகைகள் எதிர்கொள்ளும்'' என்றார் கிஷோர் ஷ்ரேஸ்தா. இலங்கையில் தமிழ்ப் பத்திகையாளர்கள் மட்டுமின்றி, சிங்கள முற்போக்கு பத்திகையாளர்களும் நெருக்குதலுக்கு ஆளாவதை சிங்களப் பத்திகையாளர்கள் சுட்டிக் காட்டினர். ""ஒரு புறம் தமிழ்ப் பத்திகையாளர்களைச் சந்தேகக் கண்ணுடன் இலங்கை அரசு பார்க்கிறது. மறுபுறம், விடுதலைப் புலிகளும் அவ்வப்போது நெருக்கி வருகிறார்கள்'' என்றார் ஒரு பத்திகையாளர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒரு பத்திகையாளர் தொழில் தொடர்பாக டென்மார்க் சென்று திரும்பினார். இதை வைத்து, அவர் டென்மார்க்கில் புலிகளுக்கு ஆதரவாகப் பயணம் செய்து வந்தார் என்று வருணிக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டி, திட்டவட்டமாக மறுத்தார். ஆப்கானிஸ்தானில் கடந்த சில மாதங்களில் மட்டும் இரு பத்திகையாளர்கள் கொல்லப்பட்டனர். இரு பெண் பத்திகையாளர்கள் தாக்குதல் காரணமாக ராஜிநாமா செய்துவிட்டனர். ஒரு கட்டுரைக்காக ஒரு பத்திகையாளருக்கு மாகாண கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. பலருக்கு அபராதம், சிறை, காவல், கெடுபிடி விசாரணை என்பது சகஜமாகிவிட்டது. கடந்த ஆண்டு 5 பேர் கொலையுண்டனர். வங்க தேசத்தில் அரசியல் தொடர்பான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு கார்ட்டூனிஸ்ட் சிறைத் தண்டனை பெற்றிருக்கிறார். இது தவிர போலீஸ் ஊழலை எழுதிய நிருபர் கைது செய்யப்பட்டிருகிறார். பொதுவாக, சார்க் நாடுகளில் ஜனநாயகம் நிலை பெற வேண்டும் என்பதில் அந்தந்த அரசுகள் மிகுந்த கவனம் எடுத்து வருகின்றன. ஆனால், எழுத்துச் சுதந்திரமும், கருத்துச் சுதந்திரமும் இருந்தால் மட்டும்தான் ஜனநாயகம் தழைக்க முடியும் என்பதை அந்த அரசுகள் ஏனோ உணர மறுக்கின்றன!
பா. கிருஷ்ணன்
நன்றி ;தினமணி

போகுமிடம் வெகுதூரம்!

"கடந்த முறை ஒன்று கிடைத்ததற்கு... இந்த முறை மூன்று' என்று ஆறுதல்பட்டுக் கொள்வதைத் தவிர, பெய அளவில் பெருமிதம் அடைய ஒன்றுமில்லை என்றே தோன்றுகிறது. ஒலிம்பிக் திருவிழாவில் ஒரே வீரருக்கு 8 தங்கம், 3 தங்கம் என அமெக்காவும், ஜமைக்காவும் பதக்க அறுவடையில் ஈடுபட்டபோது, 110 கோடி மக்களின் பிரதிநிதியாகச் சென்ற இந்தியக் குழு பெற்ற மூன்று பதக்கங்கள், ஆறுதலைத் தவிர வேறு எதைத் தந்துவிட முடியும்? வெற்றிக்கான திறமை இங்கு உள்ளது; சயான வழிகாட்டுதலும், தயார்படுத்துதலும் இல்லை என்று வழக்கமான தோல்விக் காரணிகளை ஆராயும் வேளையில் சில ஆத்ம பசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒலிம்பிக்கில் இந்திய அணியின் ஒட்டுமொத்த திறமையை மதிப்பிடும் அதே நேரத்தில் தனிப்பட்ட வீரர்கள் சிலன் அலட்சியத்தையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. தங்கம் வென்ற அபினவ், வெண்கலம் வென்ற சுசில்குமார், விஜேந்தருக்கு ஒரு "சல்யூட்', காலிறுதிக்கு முன்னேறிய சாய்னா, ஜிதேந்தர், அகில்குமார் ஆகியோருக்கு ஒரு "சபாஷ்' போடும் வேளையில், அலட்சியத்தால் வாய்ப்பை கோட்டைவிட்டவர்களுக்கு ஒரு "குட்டு' வைத்தால் என்ன என்றே தோன்றுகிறது. ஆசிய அளவில் சாதனை படைத்த, நம்பிக்கை நட்சத்திரமாகக் கொண்டாடப்பட்ட நீளம்தாண்டுதல் வீராங்கனை அஞ்சு ஜார்ஜ், ஒலிம்பிக் போட்டியில் மூன்றுமுறையும் "ஃபவுல்' செய்து, தகுதிச் சுற்றிலேயே வெளியேறி நம்பிக்கையைப் பொய்யாக்கினார். "கணுக்கால் காயம்' என அஞ்சு மிகச் சாதாரணமாக அதற்குக் காரணமும் கூறினார். புற்றுநோயின் கொடூரத் தாக்குதல் இருந்தாலும் 10 கி.மீ. நீச்சல்போட்டியில் தங்கம் வென்ற நெதர்லாந்து வீரர், விபத்தில் ஒரு காலை இழந்தாலும் நீச்சல் போட்டியில் பங்கேற்று பந்தயதூரத்தை நிறைவுசெய்த வீராங்கனை போன்றவர்களின் வெற்றிக்கான போராட்டத்துடன் அஞ்சு கூறிய காரணத்தை ஒப்பிட்டுப்பார்த்தால், அவர் யாரை ஏமாற்றுகிறார் என்பது புயும். அடுத்து டென்னிஸ் புயல்(?). உடை விஷயத்தில் இந்தியாவில் ஆங்காங்கே கிளம்பிய எதிர்ப்பையடுத்து, இந்தியாவில் இனி விளையாடவே மாட்டேன் என்று சபதம்(!) செய்து வெளிநாடுகளில் மட்டுமே விளையாடி வந்த சானியா. சொந்த நாட்டில் விளையாட மாட்டேன் என்று கூறியவரால், சொந்த நாட்டுக்காக முழு அர்ப்பணிப்புடன் அந்நிய மண்ணில் எப்படி விளையாட முடியும்? முடியாது என்று முதல்சுற்றிலேயே தோற்று வெளியேறி பதில்சொன்னார் சானியா. டென்னிஸ் இரட்டையர் போட்டியிலும் சானியா சுனிதா ஜோடி 2வது சுற்றில் தோற்றுப்போனது. இதில் வேடிக்கை என்னவென்றால், ஒலிம்பிக் போட்டியில் விளையாடுவது வரை இருவரும் சேர்ந்து பயிற்சி ஆட்டத்தில்கூட ஆடியது இல்லையாம். தொடர்ந்து... டென்னிஸ் இரட்டையர்களாகப் போற்றிப் புகழப்பட்ட பயஸ், பூபதி. பல சர்வதேச போட்டிகளில் மகுடம் சூடிய இந்த ஜோடி, "ஈகோ' மோதலால் அண்மைக்காலமாக பிந்தே இருந்தது. பின்னர், "நாட்டு நன்மைக்காக' வேறு வழியின்றி ஒலிம்பிக்கில் சேர்ந்துவிளையாடுவதாக அறிவித்தனர். வெற்றி என்ன மந்திரத்தில் காய்க்கும் மாங்காயா? போட்டிக்கு முந்தையநாள் வரையில் சேர்ந்து பயிற்சி செய்யாமல், நேராக மைதானத்திற்கு வந்தால், தோற்பதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்? இவை தனிப்பட்ட குறைபாடுகள் என்றால், விளையாட்டில் அரசியல் விளையாடுவதை நிரூபித்தது ஒரு சம்பவம். பளுதூக்கும் வீராங்கனை மோனிகா ஊக்கமருந்து உட்கொண்டதாக கடைசி நேரத்தில் பிரச்னை கிளப்பி, அவர் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு பறிக்கப்பட்டது. காலம் கடந்தபிறகு அவர் மீதான குற்றச்சாட்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. "தனக்கு எதிரான சதியால் தான் ஒலிம்பிக்கில் பங்கேற்க முடியாமல் போய்விட்டதாக' மோனிகா குமுறலை வெளிப்படுத்தினார். ஒலிம்பிக்கில் பங்கேற்று இருந்தால் மோனிகா பதக்கம் வென்றிருப்பாரா, இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால், அவரது ஒலிம்பிக் வாய்ப்பு பறிக்கப்பட்டதற்கு யார் காரணம்? அவசரப்பட்டு குற்றம்சாட்டி பின்னர் மறுத்தது ஏன் என்று ஒரு விசாரணைகூட நடத்தப்பட்டதாகத் தெயவில்லை. அடுத்து காமன்வெல்த் போட்டிகளை இந்தியா நடத்தவுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளை நடத்தவும் ஆசை உள்ளது. ஆனால், அடிப்படையிலேயே ஏராளமான குறைபாடுகளுடன் விளையாட்டில் இன்னும் தவழும் குழந்தையாகவே இருக்கிறது. மக்கள்தொகையில், தொழில்வளர்ச்சியில், தகவல்தொழில்நுட்ப புரட்சியில் வீறுநடைபோடும் இந்தியாவை விளையாட்டில் மட்டும் எத்தியோப்பியா, நைஜீயா, அஜர்பைஜான், ஜிம்பாப்வே போன்ற குட்டிதேசங்கள் புறந்தள்ளி முந்துவது பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்துகிறது. ரயில்வேயில் வேலைசெய்து கொண்டே மல்யுத்தத்தில் கவனம் செலுத்தி அதில் பதக்கமும் வென்ற சுசில்குமார் போல எல்லோரும் அமைந்துவிட மாட்டார்கள். எத்தனையோ திட்டங்களுக்கு கோடி கோடியாக செலவு செய்யும் மத்திய, மாநில அரசுகள்... நாட்டின் கெளரவத்தை உலக அரங்கில் பறைசாற்றும் விளையாட்டுத் துறைக்கு கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும். பள்ளிப் பருவத்திலேயே சிறந்த வீரர்களை தத்தெடுத்து உலகளாவிய போட்டிகளுக்கு சிறப்புப் பயிற்சி கொடுத்து தயார்செய்ய வேண்டும். திறமையான வீரர்கள் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு முக்கியம் திறமையான பயிற்சியாளர்களும். விளையாட்டில் அரசியல் விளையாடுவதை அனுமதிக்கக் கூடாது. இன்னும் ஏராளமான நடவடிக்கைகள் அவசியம். ஏனெனில், விளையாட்டுத் துறையில் நாம் போகுமிடம் வெகுதூரம்!
எஸ். ராஜாராம்
நன்றி :தினமணி

புதிய தசரதனின் பதவித் துறப்பு

கம்பன் எழுதிய காவியத்தின் தனிச் சிறப்பாகக் கருதப்படுவது ஒவ்வொரு பாத்திரத்தின் பண்பு நலன்களைச் சில சொற்களால் சுட்டிக் காட்டுவதே ஆகும். தசரத மன்னன் தனது மூத்த மைந்தன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்த சூழ்நிலையை மிக அற்புதமாக பின்வரும் பாடலின் மூலம் விளக்குகிறார். மன்னனே யவனியை மகனுக்கீத்து நீ பன்னருந் தவம்பு பருவ மீதெனக் கன்ன மூலத்தினிற் கழற வந்தென மின்னெனக் கருமை போய் வெளுத்ததோர் மயிர் ""மூத்த மகனாகிய இராமனிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு சிறப்புமிக்க தவ வாழ்வை மேற்கொள்வதற்கு ஏற்ற முதிர்ந்த பருவம் அடைந்துவிட்டாய் என்பதை அவனது காதோரத்தில் ரகசியமாகக் கூற வந்ததைப் போல மயிர் ஒன்று மின்னலைப் போல வெளுத்து நரைத்துத் தோன்றலாயிற்று'' என பாடுகிறான் கம்பன். கண்ணாடியின் முன் நின்ற தசரதன் காதோரத்தில் ஒரேயொரு முடி நரைத்துக் காட்சியளித்ததைப் பார்த்தவுடனேயே முதிய பருவத்தை அடைந்து விட்டதை உணர்கிறான். உடனடியாக அயணையில் இருந்து இறங்கித் துறவுகோலம் பூணுவது குறித்து சிந்திக்கிறான். குலகுருவான வசிட்ட மாமுனிவரையும், அமைச்சர்களையும் அழைக்கிறான். அவர்களும் விரைந்து வந்து கூடுகிறார்கள். அப்படி கூடியவர்கள் நடுவே தனது மனக் கருத்துகளை தசரதன் வெளியிடுகிறான். இந்த இடத்தில் தசரதனின் மிக உயர்ந்த பண்பு நலன்களைச் சுட்டிக்காட்டும் வண்ணம் கம்பனின் மற்றொரு பாடல் அமைந்துள்ளது. இறந்திலன் செருக்கலத் திராமன் தாதைதான் அறந்தலை நிரம்பமூப் படைந்த பின்னரும் துறந்தில னென்பதோர் சொல்லுண் டாயபின் பிறந்தில னென்பதிற் பிறிதுண் டாகுமோ ""இராமனின் தந்தையான தசரதன் போர்க்களத்தில் இறந்தானில்லை. முதிர்ந்த வயதை அடைந்த பிறகும் பற்றுகளைத் துறந்தானில்லை என்பதாகிய ஒரு பழிச்சொல் உண்டான பிறகும் வாழ்வது சயோ'' என்கிறான். ஒரேயொரு நரை மயிர் தோன்றியதைக் கண்டவுடனேயே முதுமை அடைந்து விட்டோம் என்ற எண்ணம் மேலோங்க மைந்தனுக்கு முடி சூட்ட நினைக்கிறான் தசரதன். இன்னும் பற்றுகளைத் துறக்காத பாவியாக அயணையில் தொடர்ந்து அமர்ந்திருக்க அவன் விரும்பவில்லை. தசரதனின் உயர்ந்த பண்பு நலன்களை இவ்வாறு சுட்டிக்காட்டி வியக்கிறான் கம்பன். கம்பன் கண்ட தசரதன் அவன். ஆனால் இன்று புதிய தசரதனாக முதல்வர் கருணாநிதி காட்சி தருகிறார். ""5 முறை முதலமைச்சராக இருந்து விட்டேன். இனி அடுத்த முறை முதலமைச்சராக இருக்க விரும்பவில்லை''யெனத் திடீரென அறிவித்திருக்கிறார். இதுபோன்ற வேளைகளில் அவர் வழக்கமாக பேசும் பேச்சா? அல்லது உண்மையிலேயே அப்படி கூறுகிறாரா? என்பது விவாதத்திற்கு உயதாகும். 1993ஆம் ஆண்டில் கழகத்திலிருந்து வைகோவும் அவரது தோழர்களும் விலக்கப்பட்ட வேளையில் அரசியலிலிருந்தே நான் விலகிக் கொள்கிறேன் என்று அறிவித்தவர் கருணாநிதியே ஆவார். ஒரு வாரம் கழித்து வழக்கம் போல தொண்டர்களின் வேண்டுகோளை ஏற்று அறிவிப்பைத் திரும்பப் பெற்றார். 2001ஆம் ஆண்டில் இதுதான் நான் கடைசியாக நிற்கும் தேர்தல் எனக் கூறினார். ஆனால் 2006ஆம் ஆண்டு தேர்தலிலும் போட்டியிட்டார். 2008ஆம் ஆண்டில் தனக்கு பிறந்தநாள் விழா வேண்டாம் என்றார். உடனே சொல்லி வைத்தாற்போல கழகத் தொண்டர்கள் அலறியடித்துக் கொண்டு அய்யோ அப்படிக் கூறாதீர்கள் நாடு தாங்காது. நாங்களும் தாங்க மாட்டோம் எனக் கெஞ்சினார்கள். பிறகு அவரது பிடிவாதம் தளர்ந்தது. உங்களுக்காக எனக் கூறி பிறந்தநாள் விழாவுக்கு ஒப்புக்கொண்டார். இது அவருக்கே ஆகி வந்த கலையாகும். ஆனால் மீண்டும் முதல்வர் பதவி ஏற்கத் தனக்கு விருப்பம் இல்லை என்று அவர் கூறிய பிறகு நாட்டிலும், கழகத்திலும் எத்தகைய பிரளயமும் ஏற்பட்டுவிடவில்லை. இது ஏன்? ""நியாயம் தானே! முதிய வயதில் இனி அவர் ஓய்வெடுத்துக் கொள்வது நாட்டுக்கும் நல்லது அவருக்கும் நல்லது'' என நினைத்து அனைவரும் அமைதி காத்து விட்டார்களா? முதுமையின் காரணமாக இவ்வாறு கூறியுள்ளாரே தவிர பதவிப் பற்றினை வெறுத்தோ, இளைய தலைமுறைக்கு வழிவிட்டு கழகத்தில் தான் முன்மாதியாகத் திகழ்ந்தால் மற்றவர்களும் அதன்படி அமைச்சர் பதவிகளிலிருந்தும், கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் விலக முன்வருவார்கள் என நினைத்தோ இவ்வாறு கூறியதாகத் தெயவில்லை. விலைவாசி உயர்வு, காவி, முல்லைப் பெயாறு, பாலாறு போன்ற நதிநீர்ப் பிரச்னைகள், ஈழத் தமிழர் பிரச்னை, மீனவர் பிரச்னை, கச்சத்தீவுப் பிரச்னை, சேதுக் கால்வாய் பிரச்னை போன்ற உண்மையான மக்கள் பிரச்னைகளைத் தீர்க்க முடியாத நிலைமையில் இவ்வாறு கூறினாரா? அல்லது தீராத இப்பிரச்னைகளிலிருந்து மக்கள் கவனத்தைத் திசை திருப்ப இவ்வாறு கூறினாரா? என்பதும் புயாத புதிர்தான். சக அமைச்சர்கள் மீதும், உயர் அதிகாகள் மீதும் அடுக்கடுக்காக எழுப்பப்படும் ஊழல் புகார்களைக் கண்டு மனம் நொந்த நிலையில் பதவி விலக முடிவெடுத்திருக்க முடியாது. ஏனெனில் இவரது குடும்ப அதிகார மையங்களின் ஊழலும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதும் அமைச்சர்களையும் விஞ்சிவிட்டது. தவறுகளை இடைவிடாது சுட்டிக்காட்டிய பாமகவை கூட்டணியிலிருந்து வெளியேற்றியாகிவிட்டது. கம்யூனிஸ்டுகளும் வெளியேறத் தயாராகி வருகிறார்கள். எஞ்சியிருக்கும் காங்கிரஸ் கட்சியிலோ பல்வேறு குழுக்களின் ஓய்வு ஒழிச்சல் இல்லாத மோதல்! மனிதர் பாவம் வயதான நிலையில் என்னதான் செய்வார்? அதனால் இந்த முடிவெடுத்தாரா என்பது அவருக்கு மட்டுமே புயக் கூடியது. அடுத்த தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை கிடைத்து கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒன்று கூடி புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க முற்படும்போது தான் மீண்டும் முதல்வராக வர விரும்பவில்லை என பேச வேண்டிய பேச்சை இப்போது பேச வேண்டியது எதற்காக? என்ன நோக்கத்திற்காக? அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி கூட இவருடன் கூட்டு சேருமா வேறு கட்சிகளைத் துணைக்கு அழைக்குமா என்ற நிலையில் திமுகவின் வெற்றி பெய கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் மீண்டும் முதல்வராக வர விருப்பம் இல்லை என்று கூறுவது நகைப்புக்கிடமானது. ஒருவேளை முதல்வர் பதவியைத் துறக்க நேட்டாலும், கழகத் தலைவர் பதவியை ஒருபோதும் உதறித் தள்ளத் துணியமாட்டார். அப்போதுதான் ஆட்சியும், கழகமும் அவரது கட்டுப்பாட்டிலேயே இருக்கும் என்ற சூட்சுமத்தை அறியாதவரா அவர்? இராமாயண கால தசரதனுக்கு இந்த சூட்சுமங்கள் புந்திருக்கவில்லை. எனவேதான் காதருகே ஒரேயொரு மயிர் நரைத்ததைப் பார்த்தவுடன் ஆட்சியைத் துறக்கத் துணிந்தான். தன் மகன் இராமனுக்கு முடிசூட்ட முடிவு செய்தான். இவ்வளவுக்கும் பரம்பரை பரம்பரையாகக் கடைப்பிடிக்கப்பட்ட மரபுப்படி அவனுக்குக் கிடைத்த அயணை அது. அவன் தலை சாயும் வரை அமர்ந்திருக்கலாம். யாரும் அவனைக் கீழிறங்கச் செய்ய முடியாது. ஆனால் தசரதன் தானே முன் வந்து அயணையைத் துறக்க முற்படுகிறான். ஆனால் ஜனநாயக நாட்டில் புதிய தசரதனுக்குப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ளவும் மற்றவர்களுக்குப் போக்குக்காட்டி ஏமாற்றவும் தெயும். எனவே அவர் பதவி நாற்காலியில் தொடர்கிறார்.

பழ. நெடுமாறன்
நன்றி : தினமணி

சின்னமனூர் வழிகாட்டுகிறது!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்ற வசனம் தமிழ் திரைப்படங்களில் ""ஆலம் ஆரா'' காலத்திலிருந்து கேட்டுகேட்டு காது புளித்துவிட்டது. ஆனால் அந்தக் கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படாமல் இப்பூவுலகில் நிச்சயிக்கப்படுவதால் பெண்ணைப் பெற்றவர்கள் முன்னெச்சக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. சின்னமனூர் என்ற சிற்றூல் உள்ள மறவர் மக்கள் மன்ற திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் மணமகன், மணமகள் இருவரும் "எய்ட்ஸ்' பசோதனைக்கு உள்பட்டு சான்றிதழ் பெற்ற பிறகே திருமண அழைப்பிதழை அச்சிட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு அது மக்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நல்ல ஏற்பாட்டை தமிழ்நாட்டின் பிற பகுதியினர் அறிந்திருக்கவில்லை. சமீபத்தில் நடக்கவிருந்த ஒரு திருமணமே, மணமகனுக்கு "எய்ட்ஸ்' நோய் அறிகுறி இருப்பது ரத்தப் பசோதனையில் தெயவந்ததால் நின்று போனது. அதன் பிறகுதான் இந்தத் திருமண மண்டப நிர்வாகிகளின் முன் யோசனை வெளி உலகுக்குத் தெய வந்திருக்கிறது. இப்படியொரு நிபந்தனையை பெண்ணைப் பெற்றவரோ அவர் சார்பில் மற்ற உறவினர்களோ, பெண் பார்க்க வரும்போதே விதித்தால், ""உன் பெண்ணே வேண்டாம், என் பையனையா சந்தேகப்படுகிறாய்?'' என்றுதான் பிள்ளையைப் பெற்றவர் சீறியிருப்பார். இந்தப் பொறுப்பை ஒரு திருமண மண்டபம் தானாகவே முன்வந்து எடுத்துக்கொண்டிருப்பது பாராட்ட வேண்டிய செயல். பொதுவாக இன்றைய இளைய தலைமுறையினர் தவறான வழிகாட்டலாலோ, அல்லது சாகச முயற்சியாக நினைத்தோ திருமணத்துக்கு முன்னதாக தவறிவிடும் வாய்ப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படுகிறது. அதனால் ரகசிய வியாதிகளுக்கு ஆளாகிறவர்கள் தங்களுடைய நெருங்கிய நண்பர்களிடத்தில்கூட இதைச் சொல்லாமல் மறைத்துவைத்து நோயைத் தீவிரமாக்கிக்கொள்கின்றனர். இது குறித்து பால்வினை நோய் டாக்டர்களைக் கேட்டால் வண்டி வண்டியாகச் சொல்வார்கள். இந் நிலையில் "எய்ட்ஸ்' பசோதனையைத் தாங்களாகவே யாராவது செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது. மிகவும் முற்போக்கான முதல்வர் ஆட்சி செய்யும் இந்தச் சமயத்தில், சின்னமனூர் விவகாரம் குறித்து மாநில அரசு கருத்துக்கூட தெவிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு சொத்துமை போன்றவற்றுக்கு முதல் முதலில் சட்டம் இயற்றிய மாநிலம் என்று பெருமை பேசும் முதலமைச்சர், இந்தச் செய்தி வந்தவுடனேயே, ""தமிழ்நாடு முழுக்க இனி நடக்கும் எல்லாவிதமான திருமணங்களுக்கும் எய்ட்ஸ் பசோதனை மட்டும் அல்ல, முழு உடல் தகுதி பசோதனையும் அவசியம், அத்துடன் திருமணத்தைப் பதிவு செய்வதும் கட்டாயம்'' என்று ஒருங்கிணைந்த சட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அமல்படுத்தியிருக்க வேண்டும். இப்போதும் காலம்கடந்துவிடவில்லை. வெளிநாடுகளில் வேலைபார்க்கும் மணமகன்கள் சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்துகொண்டாலும், "விசா' பெறுவதற்காகவே திருமணத்தைப் பதிவு செய்துகொள்கின்றனர். எனவே சம்பிரதாயத் திருமணம், பகுத்தறிவுத் திருமணம் என்று எல்லாவற்றையுமே கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். 2 தலைமுறைகளுக்கு முன்னால் எல்லோரும் அவரவர் உறவினர்களிடையேதான் பெண் எடுத்து, பெண் கொடுத்து வந்தனர். பிறகு தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றால் வேறு மாவட்டமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஒப்புக்கொண்டனர். இப்போது படிப்பு, தொழில் ஆகியவற்றின் காரணமாக வெளிநாடுகளில் வாழும் மாப்பிள்ளைகளைக் கூட இணையதளப் பவர்த்தனை மூலம் நிச்சயிக்கின்றனர். இன்னும் சிலர் துணிந்து இதர ஜாதிகளிலும் சம்பந்தம் செய்துகொள்கின்றனர். எனவே இந்த விஷயத்தில் சின்னமனூர் திருமண மண்டபத்தின் வழிகாட்டல் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய நல்ல முன்னுதாரணம் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்க முடியாது. பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை; நல்ல படிப்பு, நல்ல சம்பளம், நல்ல வேலை என்று மற்றவர்கள் கூறுவதை மட்டுமே கேட்டு அவசரப்பட்டு மணம் பேசி முடிப்பதைவிட மண மகன் அல்லது மண மகள் குறித்து தீர விசாத்துவிட்டு பிறகு நிச்சயிப்பது வம்பு, வழக்குகளையும் வீண் மன உளைச்சலையும் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
நன்றி :தினமணி