Thursday, August 28, 2008

கள்ளச்சந்தைக்கு காரணமாகாதீர்!

தமிழகத்தைவிட அதிக மின்பற்றாக்குறை கர்நாடக மாநிலத்தில் நிலவுகிறது. தகவல் தொழில்நுட்பத் துறை கோலோச்சும் பெங்களூர் நகரில், மின்தடை இருந்தாலும், அங்கு டீசல் தட்டுப்பாடு ஏற்படவில்லை. ஆனால் சென்னையில் ஏற்படுகிறது. தமிழகத்தின் பிற பகுதிகளிலும் தட்டுப்பாடு.
எரியும் நெருப்பில் "பெட்ரோல்' ஊற்றியதைப் போல, ""செப்டம்பர் 15ம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பெட்ரோல் நிலையங்கள் செயல்படாது; காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரைதான் பெட்ரோல் டீசல் விற்பனை நடைபெறும்'' என்று தமிழ்நாடு பெட்ரோல் முகவர் சங்கம் அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை மூடுவதாலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை விற்பனையை நிறுத்தி வைப்பதாலும் ஊழியர் சம்பளம் மற்றும் மின்கட்டணத்தில் சேமிப்பு ஏற்படும் என்று சங்கத் தலைவர் சொல்லும் காரணம் வியப்பாக இருக்கிறது.
பெட்ரோல் நிலையங்கள் நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தொழில் அல்ல. "கடைவிரித்தோம் கொள்வாரில்லை' என்ற கவலைக்கு வாய்ப்பே இல்லாதவர்கள் பெட்ரோல் முகவர்களும் சமையல் எரிவாயு முகவர்களும்தான்! இவர்களின் பிரச்னையே தாங்கள் கேட்கும் அளவுக்கு வழங்கப்படுவதில்லை என்பதுதான்.
தங்களுக்குத் தேவைப்படும் அளவுக்கு குறைவின்றி பெட்ரோலியப் பொருளை ஆயில் நிறுவனங்கள் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து அவர்கள் வேலைநிறுத்தம் அறிவித்திருந்தால் அதை நம்மால் புரிந்துகொள்ள முடியும். அதைவிடுத்து, இரவில் விற்பனையை நிறுத்துவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் திறப்பதில்லை என்ற முடிவும் பிரச்னைக்கு தீர்வு ஆகாது.
இதற்கிடையில், ஞாயிற்றுக்கிழமை பெட்ரோல் நிலையங்களை திறக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது என்றாலும், இப்போதும்கூட எல்லா பெட்ரோல் நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இரவுகளிலும் திறக்கப்படுவதில்லை. நெடுஞ்சாலைகளிலும், நகரின் முக்கிய பகுதிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலேயே பெட்ரோல் நிலையங்கள் இரவிலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் செயல்படுகின்றன. இரவுப் பயணம் மேற்கொள்வோர் இவற்றையே நம்பியுள்ளனர். இப்போது சங்கத்தின் வேண்டுகோளை ஏற்று, இவை செயல்படாதென்றால், நெடுந்தூரப் பயணம் மேற்கொள்வோர் மட்டுமல்ல, உள்ளூர் பொதுமக்களும் பாதிக்கப்படுவார்கள்.
பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவிய காலங்களில் இரு சக்கர வாகனங்களுக்கு ஒரு லிட்டருக்கு மிகாமலும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 10 லிட்டருக்கு மிகாமலும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்தபோது யாருமே எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பெட்ரோல் நிலையங்களின் தன்னிச்சையான இந்த முடிவை நியாயமானதாகவும் பற்றாக்குறையைச் சமாளிக்கும் நடவடிக்கையாகவும் பொதுமக்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்டனர். ஆனால் தற்போது பெட்ரோல் முகவர் சங்கம் எடுத்துள்ள முடிவு பொதுமக்களுக்கு இடையூறாக மாறுவது மட்டுமல்ல, கள்ளச்சந்தைக்கும் வழி வகுக்கும். இரவு நேரத்திலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பெட்ரோல், டீசலை கேன்களிலும் பாட்டில்களிலும் அடைத்து வைத்து, இரு மடங்கு விலைக்கு விற்கப்படும் நிலைமை உருவாக பெட்ரோல் முகவர் சங்கமே காரணமாக ஆகிவிடலாமா? இவர்களால் வேலை இழக்கப்போகும் பெட்ரோல் நிலைய இரவு நேர ஊழியர்கள் வேறு எந்த தொழிலுக்குப் போக முடியும்?
பெட்ரோலியப் பொருள்களில் கள்ளச்சந்தை மூலம் கொழுத்த லாபம் தருவது தற்போதைக்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே. இனி பெட்ரோல், டீசலுக்கும் கள்ளச் சந்தை என்றால்...நடுத்தர வருவாய் பிரிவினருக்குத் திண்டாட்டம்தான். பெட்ரோல் முகவர் சங்கம் சமூக நலன் கருதியும், தங்கள் தொழிலாளர் நன்மை கருதியும் இந்த முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு பெட்ரோல் நிலையமும் கடந்த ஓராண்டில் விற்ற பெட்ரோல், டீசல் அளவை கணக்கிட்டு, அந்த அளவை குறைந்தபட்சமாக வைத்துக்கொண்டு, அந்தப் பகுதியில் எத்தனை சதவீதம் வாகனங்கள் அதிகரித்துள்ளதோ அதற்கேற்ப பெட்ரோல், டீசலை அதிகரித்து வழங்க வேண்டிய பொறுப்பு ஆயில் நிறுவனங்களுக்கு உள்ளது.
தொழில்நிறுவனங்கள் தங்களுக்குத் தேவைப்படும் டீசலை ஆயில் நிறுவனங்களிடம் நேரடியாக, பெட்ரோல் நிலையங்கள் பெறும் அதே கொள்முதல் விலையிலேயே பெறுவதற்கு அரசு வகை செய்தால், தொழில்நிறுவனங்களும் பயன்பெறும். இதனை தொழில்நிறுவனங்களுடன் அரசும் ஆயில் நிறுவனங்களும் பேசித் தீர்மானிக்கலாம்.
நன்றி : தினமணி

தீதும் நன்றும் பிறர் தர வாரா

61வது சுதந்திர தின விழா எல்லா மாநிலங்களிலும் விமரிசையாகவும், அசம்பாவிதம் எதுவுமின்றி கொண்டாடப்பட்டது. சுதந்திர தினம் என்றாலே எல்லோருக்கும் அந்நாளில் ஏற்பாடு செய்யப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தான் நினைவுக்கு வரும். ஒரு லட்சம் போலீஸார் குவிப்பு, டிக் டிக் டிக்... சுதந்திர தினம் நெருங்குகிறது போன்ற தலைப்புச் செய்திகள் நிகழ்காலத்தின் பிரதிபலிப்பு.
சமீபத்திய பெங்களூரு, ஆமதாபாத், சூரத் நகரங்களில் நிகழ்ந்த தொடர் குண்டு வெடிப்புச் சம்பவங்கள் நாட்டையே உலுக்கியது. ஆமதாபாத்தில் நடந்த சம்பவம் மற்ற நிகழ்வுகளைவிட கொடுமையானது. சூரத்தில் ஒவ்வொரு நாளும் உயிருள்ள குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்படுகின்றன. இதுவரை 29 வெடிக்காத குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
""நல்ல தீவிரவாதி செத்தவனாகவே இருப்பான்'' இது பயங்கரவாத படிப்பில் கூறப்படும் முதுமொழி. பயங்கரவாதத்தில் தீவிரமாக ஈடுபடுபவன் தன் உயிரையும் இழப்பதற்குத் தயாராக இருப்பான்; அவன் சேர்ந்த அமைப்பிற்கு அவன் நல்ல தீவிரவாதி. பயங்கரவாதத்தை ஒடுக்கும் பணியில் உள்ள போலீஸார் இம்மாதிரி உயிர் தியாகத்திற்குத் தயாராக இருக்கும் தீவிரவாதியைச் சுட்டு வீழ்த்துவதிலே குறியாயிருப்பார்கள் அதற்காக தான் மேற்சொன்ன முதுமொழி.
வன்முறையாளர்கள் தங்களது முயற்சியில் பல முறை தோற்கலாம். ஒருமுறையாவது அவர்களது தீய எண்ணம் நிறைவேறினாலும் சமுதாயத்திற்கு பேரிழப்பாக முடிகிறது. உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் ஒவ்வொரு முறையும் வெற்றி பெற வேண்டும். ஒரு சிறு அசம்பாவிதம் நிகழ்ந்தாலும் எடுத்த முயற்சிகள் பெரும் பின்னடைவு அடையும். பாதுகாப்பு மற்றும் நுண்ணறிவு அணிகள் பல இடங்களில் பயங்கரவாதக் குழுக்களைக் கண்டுபிடித்துச் செயலிழக்கச் செய்துள்ளன. ஆனால் நுண்ணறிவுப் பிரிவுகள் தங்களது வெற்றிகளைப் பறைசாற்ற முடியாது. தோல்வியைத் தழுவினால் அதற்கு பொறுப்பேற்க வேண்டும்.
2003ல் இருந்து 95 இடங்களில் இந்தியாவில் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் ஓர் உண்மை புலப்படும். தீய செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதக் குழுக்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ உள்ளூரில் உதவி கிடைத்துள்ளது. ஒரு சம்பவத்தில் தீவிரவாதிகள் அதிக வாடகை கொடுத்து வீடு எடுத்து தங்கி சம்பவத்திற்குப் பிறகு தலைமறைவாகியுள்ளனர். 1991ல் நிகழ்ந்த ""திருப்பெரும்புதூர்'' குண்டுவெடிப்பில் சம்பந்தப்பட்ட சிவராசன், சுபா சென்னை புறநகர்ப் பகுதியில் தங்கிப் பின்பு பெங்களூரு சென்றனர். மும்பையில் 2003ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் குறித்த நேரத்தில் வெடிக்கக் கூடிய குண்டு மறைத்து வைக்கப்பட்ட பெட்டியைச் சம்பந்தமே இல்லாத மூன்றாம் மனிதர்கள் மூலம் மக்கள் நடமாடும் இடத்தில் வைக்கப்பட்டு சேதம் ஏற்படுத்தப்பட்டது. எவ்வளவுதான் மறைமுகமாக நாசவேலையில் ஈடுபடுபவர்கள் சதித் திட்டம் தீட்டினாலும் தெரிவு செய்த இடங்களில் செயல்முறைப்படுத்துவதற்கு முகப்பாளர்கள் வெளியில் வர வேண்டும். அல்லது சம்பந்தப்படாத மூன்றாம் மனிதர் மூலம் பொருள்களை வைக்க வேண்டும். இங்கு தான் உள்ளூர் சரக காவல் நிலையத்தினர் பொறுப்பு கவனத்திற்கு வருகிறது. காவல் நிலைய அதிகாரிக்கு பெரிய அளவில் மறைமுகமாக சதித்திட்டம் வகுப்பவர்கள் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் தனது சரகத்தில் புதிதாக வந்தவர்கள் பற்றியும், சந்தேகத்திற்குரிய நபர்கள் பற்றியும் கணித்து கண்காணிக்க வேண்டிய பொறுப்பு காவல் நிலைய அதிகாரிக்கு உண்டு.
இந்திய காவல் சட்டம் 1861 காவல் துறையின் முக்கிய பொறுப்பு எனப்படுவன குற்றங்கள் நடவாமல் தடுத்தல், தகவல் சேகரித்தல். இதை நிறைவேற்றுவதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொது மக்களும் சீருடை அணியாத போலீஸார் என்று கூறுவது உண்டு. ஏனெனில் ஏற்ற நடைமுறை சட்டத்தில் காவல்துறையினர்களுக்கான சில அதிகாரங்கள் பொதுமக்களுக்கும் கொடுக்கப்பட்டிருக்கிறது. சட்டத்தை அமல்படுத்துவதில் காவல்துறையினருக்கு உதவுவது ஒருவரின் பொறுப்புடன் கூடிய கடமையாகும்.
பொது மக்களின் நன்மதிப்பைப் பெறுவது காவல் நிலைய அதிகாரியின் அணுகுமுறையைப் பொறுத்தது. தமது எல்லைக்குட்பட்ட நிகழ்வுகளைப் பற்றியும், பிரச்னைகள் பற்றியும், குடியிருப்புகள், வியாபார மையங்கள், கல்வி நிலையங்கள், முக்கிய அலுவலகங்கள் பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். சமுதாயக் காவல் பணி என்பது மக்களோடு இணைவதற்கு முக்கிய பாலமாக அமைந்துள்ளது. சமுதாயக் காவல் மையங்கள் காவல் நிலைய சரகத்தின் முக்கிய இடங்களில் மக்களோடு தொடர்பு கொள்ள ஏதுவாக அமைக்கப்பட்டுள்ளன.
சமுதாயக் காவல் பணியை வெற்றிகரமாக திருச்சி நகரத்தில் வடிவமைத்துச் செயலாக்கியதற்காக திரிபாதி, இ.கா.ப. (ஐ.ஜி)க்கு பாரத பிரதமரின் தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. திருச்சி நகரின் பிரச்னைகளைக் கண்டறிந்து பொது மக்களுக்கு உதவும் வகையில் குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்ற நிகழ்வுகள் பற்றிய அச்சத்தைப் போக்குவதற்கும், நகரத்தை ஒரு பிரிவில் 12,000 ஜனத்தொகை அடங்கிய 57 ரோந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டன. அந்த ரோந்து பிரிவிற்கு நான்கு காவலர்களை பிரத்யேகமாக நியமித்து அவர்களை ரோந்து அதிகாரிகள் என்ற உயர் தகுதியைக் கொடுத்து, அவர்கள் மக்களது பிரச்னையைக் கண்டறிந்து சுமுகமான தீர்வு காணும் திறமைசாலிகளாகச் செயல்பட்டனர். அந்தந்தப் பகுதிவாழ் மக்களிடம் சென்று அவர்களைப் பற்றிக் கணக்கெடுத்து, புதியவர்கள் குடிவந்தால் தகவல் கொடுக்கவும் அறிவுறுத்தப்பட்டது. குடிசைப் பகுதிகளை அரவணைக்கும் திட்டத்தின் கீழ் அப்பகுதி மக்களின் அடிப்படை வசதிகளை மற்ற அரசாங்கத் துறைகளுடனும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடும் நிறைவு செய்ய நடவடிக்கை எடுத்து அவர்களது நம்பிக்கை பெறப்பட்டது. வேலை வாய்ப்புக்கான உதவியும் நல்கியதால் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் நேர்மையான வாழ்க்கை வாழ்வதற்கு வழிவகை செய்யப்பட்டது.
இத்தகைய ஒருங்கிணைந்த நடவடிக்கையால் குற்றங்களின் உறைவிடமாக இருந்த குலப்பட்டி என்ற பகுதி, குற்றப்பாதையை விடுத்து நல்வழியில் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொடுத்தது இந்த சமுதாயக் காவல் பணித் திட்டத்தின் சிறந்த சாதனையாகும். இதே மாதிரியான சாராய ஒழிப்புத் திட்டம் 1999ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டம் வெள்ளவேடு, குத்தப்பாக்கம் கிராமப் பஞ்சாயத்துத் தலைவர் இளங்கோவுடன் இணைந்து வெற்றிகரமாக மதுவிலக்கு போலீஸாரால் நிறைவேற்றப்பட்டது. இந்த நடவடிக்கை அந்த கிராமம், பஞ்சாயத்து நிர்வாகத்தில் முன்மாதிரி கிராமமாக மாற வித்திட்டது.
சாதாரண நாள்களில் மக்களோடு ஒன்றிப் பழகி மனிதநேயத்தோடு குறைகளைத் தீர்வு செய்தால் அசாதாரண சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் எழும்பொழுது மக்களே முன்வந்து காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து நிலைமையைச் சீர்செய்ய உதவுவார்கள். ஒரு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குற்றங்கள் மூன்று வகை 1. தெருக் குற்றங்கள் 2. வட்டாரக் குற்றங்கள் 3. சரக எல்லைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தினால் விளையும் குற்றங்கள். தெருக் குற்றங்களை பார்வைபடக்கூடிய ரோந்து மூலம் நடவாமல் தடுக்கலாம். வட்டாரக் குற்றங்களைத் தெரிவு செய்து தடுப்பதற்கும், நடந்தால் கண்டுபிடிப்பதற்கும் அந்த சரக மேல் அதிகாரிகள் அண்டை சரகங்களோடு ஒருங்கிணைந்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மூன்றாவது வகை குற்ற நிகழ்வுகள் நடவாமல் கண்காணிப்பது உயர்மட்ட காவல் அதிகாரிகளின் தலையாய கடமையாகும். பல மட்டங்களில் செயல்படும் நுண்ணறிவுப் பிரிவுகளோடு தொடர்பு வைத்து பயங்கரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை ஆராய்தல் வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட பயங்கரவாதக் குழுவைப் பற்றி பெங்களூரு தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்திற்குப் பிறகுதான் பெங்களூரு போலீஸார் தெரிந்து கொண்டனர் என்பது நடைமுறையில் காவல் பிரிவுகளில் நிலவும் இடைவெளியைக் குறிக்கிறது. முன்பே அறிந்திருந்தால் பெங்களூரு ஜுலை சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாமோ என்ற கேள்வி எழுகின்றது.
தொழில் நுட்பம் அபரிமிதமான வளர்ச்சி பெற்ற இந்நிலையில் காவல்துறை நவீன உபகரணங்களை உபயோகிக்காவிட்டால் வெற்றி இலக்கை அடைய முடியாது. லண்டன் நகரில் 7 / 7 என்று கூறப்படும் 2005ம் ஆண்டு ஜூலை 7ம் நாள் காலை 8.55 மணி முதல் ஒரு மணி நேரம் நடந்த தொடர் குண்டுவெடிப்புச் சம்பவங்களில் 56 அப்பாவி மக்கள் உயிரிழந்தனர். லண்டன் மாநகர பல முக்கிய இடங்களில் தானியங்கி காமிராக்கள் வைக்கப்பட்டுள்ளன. இதிலிருந்து கிடைக்கப்பெற்ற 2000க்கும் மேற்பட்ட படங்கள் ஆராயப்பட்டு சம்பவம் நடந்த காலை 8.30 மணிக்கு "கிங்க்ராஸ்' ரயில் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட விடியோ படங்கள் மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடிந்தது.
நியூயார்க் போன்ற நகரங்களில் பொது இடங்கள், தெருமுனைகள், வியாபார வளாகங்கள், அலுவலகங்கள் போன்ற பல இடங்களில் பொருத்தப்பட்ட காமிராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட படங்கள் தொடர்ச்சியாக ஆராயப்பட்டு காப்பகத்தில் வைக்க தனி அமைப்பு உள்ளது. சென்னை மாநகரக் காவலுக்கு சாலைகள், பொது இடங்களில் காமிராக்கள் மூலம் கண்காணிக்கவும், சமுதாய உதவி மையங்கள் அமைக்கவும், வெடிமருந்து கண்டுபிடிக்கக்கூடிய நவீன தணிக்கை மையங்கள் அமைக்கவும், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட உபகரணங்கள் "மெகா சிட்டி போலீஸ்' திட்டத்தின் கீழ் வகுக்கப்பட்டுள்ளன. நவீன அணுகுமுறை காவல்துறைக்கு அவசியம். காவல் நிலையங்களுக்கிடையேயான முக்கிய பிரச்னையான எல்லைப் பிரச்னை, குற்றங்கள் தலைதூக்குவதற்குதான் உதவும். இங்குதான் காவல்துறையின் உயர் ஆளுமை தலையிட்டு ஆரோக்கியமான தகவல் பரிமாற்றம் ஏற்பட வழி செய்தால் தான் அசம்பாவிதங்களைத் தவிர்க்க முடியும்.
வன்முறையில் ஈடுபடுபவர்கள் பயங்கரவாதிகள். குற்றத்திற்காக அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் சார்ந்திருக்கும் சமுதாயத்தையோ, பேசும் மொழி அடிப்படையிலோ, அவரது மதத்தை வைத்தோ ஒட்டுமொத்த சமூகத்தினரைப் பழிப்பது சமுதாயத்தில் பிரிவினையைத்தான் தூண்டும். இது மிக அபாயகரமானது. குற்றம் களையப்பட வேண்டும். வன்முறைகள் கவனமாக ஆராயப்பட வேண்டும். உடனடி புலன்விசாரணை, குற்றவியல் நடவடிக்கை எடுக்கும் அதே நேரத்தில் பிரிவினை சக்திகள் தலைதூக்குவதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிந்து குறைகள் அகற்றப்பட்டு எல்லோரும் ஆரோக்கியமான முறையில் வாழ்க்கையில் முன்னேறுவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டால்தான் சுமூகமான தீர்வு ஏற்படும்.
நிலையான இந்த அஸ்திவாரத்தை மேலும் பலப்படுத்தி நல்லிணக்கத்தைப் பரிமளிக்கச் செய்வது சமுதாய நல்லெண்ணம் படைத்தவர்களின் பொறுப்பு.
ஆர். நடராஜ்
நன்றி :தினமணி

வெப்பம் குறைய மூன்று வழிகள்

பூமியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகத்துக் கொண்டே வருகிறது. அண்மையில் ஜப்பானில் கூடிய ஜி8 மாநாட்டின்போது, இதுபற்றி ஓர் அறிக்கையை உலக நாடுகளில் உள்ள 12 சிறந்த விஞ்ஞானிகள் வெளியிட்டனர். அதன்படி, 20 ஆண்டுகளில் பூமியின் வெப்பம் 0.2 முதல் 0.4 சென்டிகிரேடு என்ற அளவில் அதிகக்கப் போகிறது என்று முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள். பூமி வெப்பம் உயர்ந்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள பனிமலைகள் தொடர்ந்து உருகத் தொடங்கிவிடும். அவ்வாறு உருகினால் கடல்நீர் அளவு உயர்ந்து கடற்கரையை ஒட்டியுள்ள நகரங்கள் மெல்ல மெல்ல மூழ்கிவிடும் அபாயம் உள்ளதாகக் கணித்துள்ளார்கள். இதுகுறித்து பேசுவதற்குத்தான் டோக்கியோவில் ஜி8 நாடுகளின் உச்சி மாநாடு சென்ற ஜூன் மாதம் நடைபெற்றது. இதில் ஜி8 நாடுகள் மட்டுமல்லாமல் சீனா, இந்தியா, தென்னாப்பிக்கா, பிரேசில், மெக்சிகோ ஆகிய ஐந்து நாடுகளும் பங்கு பெற்றன. இந்த ஐந்து நாடுகளின் பிரதிநிதிகள் வெப்பநிலை குறித்த ஒரு வரைவு அறிக்கையைத் தயாப்பதில் கூட்டாக ஈடுபட்டனர். இந்த உச்சி மாநாட்டில் ஜி8 நாடுகள் அல்லாமல் இதில் பங்குபெற்ற அந்த ஐந்து நாடுகளும் பூமி வெப்பத்திற்குக் காரணமான 37 தொழில்வள நாடுகளில் முதல் ஐந்து நாடுகளாகும். பூமி வெப்பம் அதிகக்கக் காரணமாக இருந்து வருகிற நாடுகளில் முதல் நாடு அமெக்கா. அது ஜி8 நாடுகளில் ஒன்று. இரண்டாவது நாடு சீனா. இது மற்ற 5 நாடுகளில் ஒன்று. எதிர்காலத்தில் சீனாவும், இந்தியாவும்தான் க மாசுவை அதிக அளவில் வெளியிடும் நாடுகளாக இருக்கும் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இந்தியாவில் ஆண்டுக்கு நபர் ஒருவர் 1.2 டன் க மாசுவையும், அமெக்காவில் நபர் ஒருவர் 20 டன் க மாசுவையும் வெளியிடுவதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். தொழில்வள நாடுகள் தங்கள் தொழிற்சாலைகளிலிருந்து மாசைப் புகையாக, தூசியாக, வெப்பமாக, சப்தமாகத் தொடர்ந்து வெளியேற்றிக் கொண்டே இருக்கின்றன. இதனால் பூமிக்கு மேலே வியாபித்துக் கிடக்கிற 5 கி.மீ. உயரத்திற்குக் காற்று மண்டலம் நச்சுப்படுத்தப்பட்டு வருகிறது. இது பூமியின் தட்பவெப்ப நிலைகளுக்குக் கேடு விளைவிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த 12 விஞ்ஞானிகளும் உலகத் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். இந்தக் கேடுகளை எந்தெந்த வகையில் எல்லாம் குறைக்க முடியுமோ, அதைச் செய்வதற்கு முன்வரும்படி உலக நாடுகளை அவ்விஞ்ஞானிகள் கேட்டுக் கொண்டுள்ளனர். ரஷிய விஞ்ஞானி யூ இஸ்ரேல் என்பவர்தான் இந்தக் கூட்டறிக்கையைத் தயாத்ததில் பெரும் பங்காற்றியவர். நம்முடைய பூமிப் பரப்பில் பரவியுள்ள க மாசு நச்சுத்தன்மை உடையது. இதை எப்படிக் குறைப்பது என்பதற்கு ஜப்பான் நாடு ஒரு புதிய ""உற்பத்திஉத்தி'' ஒன்றைக் கையாண்டுள்ளது. அதைப் பின்பற்றினால் 2050க்குள் சுற்றுச்சூழலில் படிந்துள்ள நச்சுத்தன்மையுள்ள க மாசை 70 சதவீதம் அளவுக்குப் படிப்படியாகக் குறைத்துவிடலாம் என்கிறார்கள் ஒரு பிவினர். இந்த உற்பத்திஉத்தி உலகத்திலுள்ள ராட்சதத் தொழிற்சாலைகள் அனைத்திலும் கையாளப்பட்டாலும், நச்சுத்தன்மையுள்ள க மாசைக் குறைப்பது சிரமமே என்கிறார்கள் இன்னொரு பிவினர். ஆகவே, பூமி வெப்பத்தைக் குறைப்பதற்கு வேறு சில உத்திகளைக் கையாள வேண்டியவர்களாக நாம் உள்ளோம். அவற்றில் ஒன்று நிலப் பொறியியல் தொழில்நுட்பம். பூமியின் மேல் விழுகிற சூய வெப்பத்தின் ஒரு பகுதியை பூமி உள்வாங்கிக் கொள்கிறது. இன்னொரு பகுதியை பூமி பிரதிபலித்து வெளிவிடுகிறது. பூமியின் மேலுள்ள மரங்கள்தான் இந்த வெப்பத்தின் ஒரு பகுதியைத் தன்மயப்படுத்திக் கொண்டு மறுபகுதியைப் பிரதிபலித்து வெளிவிடுகின்றது. இந்தப் பிரதிபலிப்புத் திறன் மரத்தின் வயதுக்கேற்ப வேறுபடுகிறது. இளமையான மரங்கள் இந்தக் க மாசைத் தனது வளர்ச்சிக்குத் தேவையான அளவுக்கு எடுத்துக் கொள்கிறது. அதேசமயம், வயதான மரங்கள் இதே க மாசை அந்த அளவுக்கு எடுத்துக் கொள்வதில்லை. இந்த உண்மையை விஞ்ஞானிகள் இப்போதுதான் கண்டறிந்து தெவித்துள்ளனர். இதன் மூலம், க மாசை அதிகம் உள்கொண்டு பிராணவாயுவை அதிகமாக வெளியிடுபவை, வளர்ந்து வருகிற இளமையான மரங்கள்தான். வயதான மரங்கள் தமது முதுமை காரணமாக இந்தப் பணியைச் செய்வதிலிருந்து ஓய்வு பெற்று விடுகின்றன என்கிறார்கள் விஞ்ஞானிகள். மரக்கன்றுகளைப் புதிது புதிதாக நட்டு வனவளத்தைத் தொடர்ந்து அதிகப்படுத்தி வருவோமானால், நமக்குத் தேவையான பிராண வாயுவை மரங்கள் கொடுக்கும். நமது கயமில வாயுவை மரங்கள் வாங்கிக் கொள்ளும். இதைச் சுறுசுறுப்பாகச் செய்து பூமியின் சுற்றுச்சூழலைச் சுத்திகக்கின்ற பணியை எல்லா மரங்களுமே செய்வதாகவே இதுவரை நாம் எண்ணி வந்தோம். அப்படி இல்லை. பூமியின் தட்பவெப்பநிலையைச் சமநிலையில் பராமக்க வேண்டுமானால், வனங்களில் உள்ள வயதான மரங்களைத் தொடர்ந்து அப்புறப்படுத்தவும் வேண்டும்; புதிய மரக் கன்றுகளை நட்டு வளர்க்கவும் வேண்டும். பூமியில் க மாசு என்ற கார்பன் டை ஆக்ஸைடு உருவாவதற்குக் காரணம், நமது தொழிற்சாலைகள் வெளியிடும் மாசுகள்தான். பூமியில் காட்டு வளம் 33 சதவீதம் இருந்தால்தான் தட்பவெப்பச் சமநிலை பராமக்கப்படும் என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். இப்போது 12 சதவிகிதம் வரைதான் காட்டுவளம் இருப்பதால் பூமியில் அதிகத்துள்ள க மாசுவைக் குறைக்க முடியாமல் போகிறது. அதனால்தான் மேலும் மேலும் பூமியின் வெப்பம் அதிகத்து வருகிறது. க மாசை உள்கொண்டு பூமியின் வெப்பத்தை மரங்கள் குறைப்பதைப் போலவே கடல்பாசிகளும் இந்தக் க மாசுவை உள்கொண்டு வெப்பத்தைக் குறைக்கிறது என்பதையும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மரக் கன்றுகளை நடுவதைப் போல கடல்பாசிகளை அதிகப்பதற்கும் உய நடவடிக்கையை எடுத்தால், காட்டு மரங்கள் செய்கிற அதே பணியைக் கடல்பாசிகளும் செய்து பூமியின் வெப்பத்தைக் குறைக்க உதவும். பூமியில் கூடுதலாக ஏற்படும் க மாசுவைக் கூட, கடலிலேயே சேமித்து வைத்துக் கொள்ள முடியுமாம். இந்த இரண்டு வழிகளும் அல்லாமல், சூய வெப்பம் பூமியைத் தாக்காமல் இருக்க மேலும் ஒரு வழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மேல் ஆகாயத்தில் விக்க ஒரு ரசாயனப் போர்வையை ரஷிய விஞ்ஞானிகள் இப்போது உருவாக்கியுள்ளனர். கந்தக அமிலக் கரைசலை சில ரசாயனப் பொருள்களோடு கலந்து, பூமிக்கு மேல் 12 16 கி.மீ. உயரத்திற்குச் சென்று விமானம் மூலம் பரவலாகத் தெளித்துவிடும் சோதனை முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். அவ்வாறு செய்தால், பூமிக்கு வரும் சூயக் கதிர்களின் வெப்பத்தை அது பாதியாகக் குறைத்து விடுகிறது. அவ்வாறு குறையுமானால், பூமியின் வெப்பநிலையும் குறைந்து விடுகிறது. இவ்வாறு, இளமையான காட்டு மரங்களின் மூலமாகவும், அதிகமான கடல்பாசிகளின் மூலமாகவும், கந்தகக் கரைசல் போர்வை மூலமாகவும் பூமியின் வெப்பத்தைச் சில "டிகிகள்' குறைக்க முடியும். இந்த கந்தக அமிலக் கரைசலைத் தெளித்து, பூமியின் வெப்பத்தைக் குறைக்கலாம் என்பதை, ஒரு தற்செயலான நிகழ்வால்தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொதிக்கும் குழம்பை எமலை வெளியே கக்குகிற போது, அந்தக் குழம்பில் உள்ள கந்தக அமிலம் ஆகாயப் பரப்பில் வீசப்படுகிறது. அதன் காரணமாக, அந்த எமலைப் பிரதேசத்தில் வெப்பநிலை வெகுவாகக் குறைகிறது. இதைக் கண்டறிந்த விஞ்ஞானிகள் அதே கந்தக அமிலக் கரைசலைத் தயாத்து விமானங்களில் எடுத்துச் சென்று ஆகாயத்தில் தெளித்து, சூய வெப்பத்தைக் குறைத்துவிடலாம் என்று சோதனை செய்து அதில் வெற்றி பெற்றுள்ளனர். இந்தச் சோதனையை ரஷியாவிலுள்ள சில பகுதிகளில் தற்போது செய்து பார்த்து வருவதாகவும், இதிலுள்ள ஒரே குறைபாடு, தெளித்த பிறகு ஆகாயத்திலிருந்து அக்கரைசல் பூமியை நோக்கி வேகமாகக் கீழே வந்துவிடுகிறது என்பதுதான். அதனை ஆகாயத்திலேயே நிரந்தரமாகப் பந்தலிட முடியவில்லை என்கிறார் ரஷிய விஞ்ஞானி யூ இஸ்ரேல். பூமியின் வெப்பநிலையை மாற்றுவதற்கு ஜப்பானில் கூடிய 12 விஞ்ஞானிகளின் உச்சி மாநாட்டு அறிக்கை இந்நூற்றாண்டின் அய சிந்தனையாகும். அந்த அறிக்கையின்படி, காடுகளில் தொடர்ந்து வயதான மரங்களை வெட்டிவிட்டுக் கன்றுகளை நட்டு வளர்த்துக் கொண்டே வர வேண்டும். மரங்களையே வெட்டக் கூடாது என்று சூற்றுச்சூழல்வாதிகள் சொல்வதை மறுயோசனை செய்ய வேண்டியவர்களாகவே உள்ளோம். வனங்களில் வெட்டப்படுவதற்குயவை வயதான மரங்கள் என்பதையும் வளர்ப்பதற்குயவை மரக் கன்றுகள் என்பதையும் தெளிவாகப் புந்துகொள்ள வேண்டும். இரண்டாவது, மரங்களைப் போலவே, கயமில வாயுவை உள்கொண்டு வாழ்கிற கடல்பாசிகளைப் பெருக்குவதன் மூலமும் பூமி வெப்பத்தைக் குறைக்க முடியும். மூன்றாவதாக, மக்கள் வாழ்கிற நகரங்களில் கந்தக அமிலக் கரைசலை விமானத்தின் மூலம் தெளிப்பதாலும் புவி வெப்பத்தைக் குறைக்க முடியும். இந்த மூன்றும் புதிய கண்டுபிடிப்புகள். இவற்றை உலக நாடுகள் நடைமுறைப்படுத்தினால், பூமி வெப்பத்திலிருந்து விடுதலை பெற முடியுமென்று அண்மையில் கூடிய டோக்கியோ மாநாடு வலியுறுத்தியிருக்கின்றது.
பெ. சிதம்பரநாதன்
(கட்டுரையாளர்: ஓம் சக்தி மாத இதழின் பொறுப்பாசியர்).
நன்றி : தினமணி