Saturday, August 2, 2008

உளவுத்துறையில் மாற்றம் தேவை!

இந்தியாவில் கர்நாடக மாநிலம் பெங்களூர், குஜராத் மாநிலம் ஆமதாபாத் ஆகிய நகரங்களில் தீவிரவாதிகள் நடத்திய தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் நூற்றுக்கணக்கான அப்பாவி மக்கள் பரிதாபமாக இறந்தனர்.
இந்தியாவில் முஸ்லிம் தீவிரவாத அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகள் குறித்து மத்திய, மாநில உளவுத்துறை கண்காணித்து வருகிறது. ஆனால் அவர்களது செயல்பாட்டை உளவுத்துறை அறிந்து கொள்ள முடியவில்லை. அதை முறியடிக்க முயற்சிகளையும் மேற்கொள்ள முற்படவில்லை.
மாநில அளவிலான உளவுத்துறையில் காவல்துறையைச் சேர்ந்தவர்களே உளவுத்துறைக்கு மாற்றப்பட்டு பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அந்தந்தப் பகுதியில் பணியாற்றும் காவல்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுவதால் சில சமயங்களில் உண்மையான தகவல்களை உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்க முடிவதில்லை.
காவல்துறையில் உளவுத்துறைக்கென தனியாகப் பணியிடங்களை நிரப்பி அவர்களுக்கு முறையான பயிற்சி அளிக்க வேண்டும். இவர்களை சட்டம், ஒழுங்கு பிரிவுக்கு மாற்றம் செய்யக்கூடாது. மேலும் தற்போது உள்ள மாநில அளவிலான உளவுத்துறை, அரசியல் கட்சிகள், அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்கள், சாதிய அமைப்புகள், தொழிற்சங்கங்கள் ஆகியவற்றின் கூட்டங்கள், போராட்டங்கள் ஆகியவை குறித்து மட்டும் முன்கூட்டியே அரசுக்குத் தகவல் தெரிவிக்கும் துறையாகச் செயல்படுகிறது.
தமிழக உளவுத் துறையினர் தனது பகுதியில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யார்? தீவிரவாத இயக்கங்களுடன் யார், யார் தொடர்பு வைத்துள்ளார்கள் என்பதைக் கண்காணிப்பது இல்லை. அப்பகுதியில் உள்ள முக்கியப் பிரச்னை என்ன? அதனால் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதா? உள்ளிட்டவை குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொள்வது இல்லை.
சமீபத்தில் விழுப்புரம் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டதைப் பார்த்த ஒரு சிறுவன், ரயில்பாதையிலேயே ஓடிச்சென்று எதிர்வரும் ரயிலை நிறுத்தி மிகப்பெரிய விபத்தைத் தவிர்த்தான். அதுபோன்று மக்கள் தங்கள் பகுதியில் யாராவது புதிதாக குடிபெயர்ந்தாலோ அவர்களது நடவடிக்கை சந்தேகப்படும்படியாக இருந்தாலோ போலீஸ் உயரதிகாரிகளுக்குத் தெரிவிக்கலாம்.
வாடகை அதிகம் கொடுக்கிறார்கள் என்பதால் வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு வீடு கேட்டு வந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என விசாரிக்காமல் வெளிமாநிலத்தவர்களுக்கு வாடகைக்கு வீடு கொடுப்பதைத் தவிர்க்கலாம். விடுதிகளில் சந்தேகப்படும்படியான நபர்கள் வந்து தங்கினால் போலீஸாருக்குத் தகவல் தெரிவிக்கலாம். இதுபோன்ற செயல்களில் மக்கள் ஈடுபட்டால் தீவிரவாதிகளின் நடமாட்டத்தைக் கண்காணிக்கலாம்.
தற்போதைய போலீஸ்துறை கடமை, கண்ணியம், கட்டுப்பாட்டை இழந்துள்ளது. தகவல் சொல்பவர்களையே புகார்தாரர்களாக ஆக்குவதால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கப் பயப்படுகின்றனர். மேலும் தகவல் சொல்பவர்களைப் பற்றி காவல்துறையே சில நேரங்களில் சமூகவிரோதிகளிடம் காட்டிக் கொடுத்து விடுகிறது. இதனால் பொதுமக்கள் தகவல் தெரிந்தால்கூட போலீஸாரிடம் சொல்ல அஞ்சும் நிலை உள்ளது.
எனவே காவல்துறை உயரதிகாரிகள், பொதுமக்களிடம் நல்ல தொடர்பை ஏற்படுத்திக் கொண்டால் உளவுத்துறையைவிட அதிகமான தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். தகவல் தெரிவிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கி ஊக்குவிக்கலாம். அதையும் ரகசியமாகவே வழங்க வேண்டும். அதற்கு பொதுமக்களும் ஒத்துழைப்பு தருவார்கள். நமது நாட்டை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்ற உறுதியை ஏற்று பொதுமக்கள் செயல்பட்டால் தீவிரவாதத்தை மக்கள் சக்தியால் முறியடிக்க முடியும்.

ஜி . சுந்தரராஜன்

நன்றி : தினமணி

3 comments:

said...

நல்ல செய்திய திரட்டி தந்து இருக்கிங்க யோசிப்பவனே.

இந்த முஸ்லிம் தீவிரவாதிகளை மொத்தமா ஒழிச்சாத்தான் உலகம் நிம்மதியாகும்.

said...

Hi! Visit my blog: http://fiammaveneta.blogspot.com. Have a nice day

said...

குரங்கு,fiamma veneta வருகைக்கு நன்றி.

குரங்கு அவர்களே
திவிரவாதிகள் எந்தமதத்தில் பெயரால் செய்தலும் ,அவர்கள் ஒழிக படவேண்டியவர்கள்.