Wednesday, August 27, 2008

சின்னமனூர் வழிகாட்டுகிறது!

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்ற வசனம் தமிழ் திரைப்படங்களில் ""ஆலம் ஆரா'' காலத்திலிருந்து கேட்டுகேட்டு காது புளித்துவிட்டது. ஆனால் அந்தக் கல்யாணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படாமல் இப்பூவுலகில் நிச்சயிக்கப்படுவதால் பெண்ணைப் பெற்றவர்கள் முன்னெச்சக்கையாக இருக்க வேண்டியிருக்கிறது. சின்னமனூர் என்ற சிற்றூல் உள்ள மறவர் மக்கள் மன்ற திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும் என்றால் மணமகன், மணமகள் இருவரும் "எய்ட்ஸ்' பசோதனைக்கு உள்பட்டு சான்றிதழ் பெற்ற பிறகே திருமண அழைப்பிதழை அச்சிட்டு பதிவு செய்துகொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டு அது மக்களாலும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நல்ல ஏற்பாட்டை தமிழ்நாட்டின் பிற பகுதியினர் அறிந்திருக்கவில்லை. சமீபத்தில் நடக்கவிருந்த ஒரு திருமணமே, மணமகனுக்கு "எய்ட்ஸ்' நோய் அறிகுறி இருப்பது ரத்தப் பசோதனையில் தெயவந்ததால் நின்று போனது. அதன் பிறகுதான் இந்தத் திருமண மண்டப நிர்வாகிகளின் முன் யோசனை வெளி உலகுக்குத் தெய வந்திருக்கிறது. இப்படியொரு நிபந்தனையை பெண்ணைப் பெற்றவரோ அவர் சார்பில் மற்ற உறவினர்களோ, பெண் பார்க்க வரும்போதே விதித்தால், ""உன் பெண்ணே வேண்டாம், என் பையனையா சந்தேகப்படுகிறாய்?'' என்றுதான் பிள்ளையைப் பெற்றவர் சீறியிருப்பார். இந்தப் பொறுப்பை ஒரு திருமண மண்டபம் தானாகவே முன்வந்து எடுத்துக்கொண்டிருப்பது பாராட்ட வேண்டிய செயல். பொதுவாக இன்றைய இளைய தலைமுறையினர் தவறான வழிகாட்டலாலோ, அல்லது சாகச முயற்சியாக நினைத்தோ திருமணத்துக்கு முன்னதாக தவறிவிடும் வாய்ப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏற்படுகிறது. அதனால் ரகசிய வியாதிகளுக்கு ஆளாகிறவர்கள் தங்களுடைய நெருங்கிய நண்பர்களிடத்தில்கூட இதைச் சொல்லாமல் மறைத்துவைத்து நோயைத் தீவிரமாக்கிக்கொள்கின்றனர். இது குறித்து பால்வினை நோய் டாக்டர்களைக் கேட்டால் வண்டி வண்டியாகச் சொல்வார்கள். இந் நிலையில் "எய்ட்ஸ்' பசோதனையைத் தாங்களாகவே யாராவது செய்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கவே முடியாது. மிகவும் முற்போக்கான முதல்வர் ஆட்சி செய்யும் இந்தச் சமயத்தில், சின்னமனூர் விவகாரம் குறித்து மாநில அரசு கருத்துக்கூட தெவிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம், பெண்களுக்கு சொத்துமை போன்றவற்றுக்கு முதல் முதலில் சட்டம் இயற்றிய மாநிலம் என்று பெருமை பேசும் முதலமைச்சர், இந்தச் செய்தி வந்தவுடனேயே, ""தமிழ்நாடு முழுக்க இனி நடக்கும் எல்லாவிதமான திருமணங்களுக்கும் எய்ட்ஸ் பசோதனை மட்டும் அல்ல, முழு உடல் தகுதி பசோதனையும் அவசியம், அத்துடன் திருமணத்தைப் பதிவு செய்வதும் கட்டாயம்'' என்று ஒருங்கிணைந்த சட்டம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டு அமல்படுத்தியிருக்க வேண்டும். இப்போதும் காலம்கடந்துவிடவில்லை. வெளிநாடுகளில் வேலைபார்க்கும் மணமகன்கள் சம்பிரதாய முறைப்படி திருமணம் செய்துகொண்டாலும், "விசா' பெறுவதற்காகவே திருமணத்தைப் பதிவு செய்துகொள்கின்றனர். எனவே சம்பிரதாயத் திருமணம், பகுத்தறிவுத் திருமணம் என்று எல்லாவற்றையுமே கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டும். 2 தலைமுறைகளுக்கு முன்னால் எல்லோரும் அவரவர் உறவினர்களிடையேதான் பெண் எடுத்து, பெண் கொடுத்து வந்தனர். பிறகு தங்கள் ஜாதியைச் சேர்ந்தவர்கள் என்றால் வேறு மாவட்டமாக இருந்தாலும் பரவாயில்லை என்று ஒப்புக்கொண்டனர். இப்போது படிப்பு, தொழில் ஆகியவற்றின் காரணமாக வெளிநாடுகளில் வாழும் மாப்பிள்ளைகளைக் கூட இணையதளப் பவர்த்தனை மூலம் நிச்சயிக்கின்றனர். இன்னும் சிலர் துணிந்து இதர ஜாதிகளிலும் சம்பந்தம் செய்துகொள்கின்றனர். எனவே இந்த விஷயத்தில் சின்னமனூர் திருமண மண்டபத்தின் வழிகாட்டல் அனைவராலும் பின்பற்றப்பட வேண்டிய நல்ல முன்னுதாரணம் என்பதில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்க முடியாது. பெற்றோர்களுக்கு ஒரு வார்த்தை; நல்ல படிப்பு, நல்ல சம்பளம், நல்ல வேலை என்று மற்றவர்கள் கூறுவதை மட்டுமே கேட்டு அவசரப்பட்டு மணம் பேசி முடிப்பதைவிட மண மகன் அல்லது மண மகள் குறித்து தீர விசாத்துவிட்டு பிறகு நிச்சயிப்பது வம்பு, வழக்குகளையும் வீண் மன உளைச்சலையும் தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.
நன்றி :தினமணி

0 comments: