Friday, August 1, 2008

உறவுகள்

அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, அக்காள், தங்கை என குடும்பத்தில்அனைவரும் அமர்ந்து பேசி அளவளாவி மகிழ வேண்டும் என்ற ஆசைஅனைவரிடமும் இல்லாமல் இல்லை.ஆனால், குடும்பத்தில் உள்ளவர்களிடம் மேலோங்கி நிற்கும் கருத்துவேறுபாடுகள், சுமுக உறவு இல்லாமை ஆகியவற்றால் அந்த ஆசைநிறைவேறுவதில்லை.அண்மையில் நண்பர் ஒருவர் தன் சகோதரர் குடும்பத்தினருடன் சுற்றுலாசென்று வந்தார். சுற்றுலா சென்றுவந்த பிறகு நண்பரின் சகோதரரிடம் ஏற்பட்டமாற்றங்களால், தன் குடும்பத்திற்கும் சகோதரர் குடும்பத்திற்கும் இடையே உள்ளநெருக்கம் குறைந்து விட்டதாக அவர் வேதனையுடன் கூறினார்.ஒவ்வொரு வீட்டிலும் பிள்ளைகள் இடையே காலையில் தொடங்கும் சிறுசிறுசண்டை இரவு படுக்கைக்குச் செல்லும் வரை நீடிக்கும்.குழந்தைகள் தங்களுக்குள் சண்டையிடுவதும், அடுத்த சில நிமிஷங்களில்சிரித்துப் பேசுவதும் அவர்களிடையே இயல்பாக இருக்கும் குணங்கள்.பள்ளிப் பருவம், கல்லூரிப் பருவம் ஆகியவற்றைக் கடந்து வேலைக்குச் சென்றுபணம் ஈட்டும் சக்தியைப் பெறும் போதுதான் எண்ண ஓட்டங்களில் மாற்றம்ஏற்படுகிறது.அதுவே திருமணத்திற்குப் பிறகு எழும் மாற்றங்களால் உறவுகளில் விரிசலைஏற்படுத்துகிறது.விட்டுக்கொடுத்துச் செல்லும் மனப்பக்குவம் குறைந்து, அதனால் ஏற்படும்மாற்றங்களால் உறவுகளுக்கிடையே விரிசல் அதிகரிக்கிறது.இதனால் தந்தை மகனுக்கு இடையே எழும் கருத்து வேறுபாடுகள், மாமியார் மருமகளுக்கு இடையே எழும் கோபம் ஆகியவை உறவில் பெரும்மாற்றங்களை, விரிசல்களை உருவாக்குகின்றன.திருமணம் ஆகிச் செல்லும் நம் வீட்டுப் பெண், புகுந்த வீட்டில் இருந்துபிரிந்து கணவருடன் தனிக் குடித்தனம் போய்விட வேண்டும் எனஎண்ணுகிறாள். அதே குடும்பத்தில் தன் மகன், வீட்டுக்கு வந்த மருமகளுடன்தனிக்குடித்தனம் செல்லட்டும் என்பதை எத்தனை பேர் ஆதரிக்கிறார்கள்.குடும்பங்களில் ஆண் வழி சொந்தங்களை விட பெண் வழி சொந்தங்களுடன்இருக்கும் தொடர்பே அதிகம். பெண் வழி சொந்தம் மனிதனின் வாழ்க்கையில்பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.ஒரு வீட்டுக்கு வரும் மருமகள் எந்த நம்பிக்கையில் வருகிறாள். தன்னைக்கரம் பிடிப்பவன், ஆயுள் முழுவதும் காப்பாற்றுவான். இன்ப, துன்பங்களிலும்முழுப்பங்கு எடுத்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில் தாய் வீட்டுச்சொந்தபந்தங்களை விட்டு, கணவன் என்ற உறவை நம்பி வருகிறாள்.ஆனால், இன்று கணவன் துணையின்றிக்கூட நாம் வாழலாம், வாழ வேண்டும்என்ற எண்ணம் அதிகரித்துவிட்டது.கல்வி, சமூக மாற்றம், அதனால் ஏற்பட்டுள்ள கலாசார மாற்றங்களால் இந்தஎண்ணம் மேலோங்கி வருகிறது.தான் சுதந்திரமாக இருக்க வேண்டும், தன்னுடைய செயல்பாடுகளில் பிறர்தலையிடக் கூடாது என்ற எண்ணம் எழும்போது, அவளது செயல்களில்மாற்றம் தென்படும். தன்னுடைய சுதந்திரத்திற்குப் பாதிப்பு வரும்போது அவள்மாறுபடுகிறாள்.இன்றைய சூழலில் குடும்பத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்குச்சென்றால் மட்டுமே ஆடம்பர வாழ்க்கையை நாம் அனுபவிக்க முடியும்.நாளுக்குநாள் தேவைகள் அதிகரித்து வருகின்றன. நம் தேவைகளைப் பூர்த்திசெய்ய நாம் பணத்தைத் தேடிச் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்குத்தள்ளப்படுகிறோம்.சாதாரணக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மோட்டார் சைக்கிள், செல்போன்இதில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்துகிறார். நடுத்தரக் குடும்பத்தினர்மேற்கண்ட இரு வசதிகளையும் அனுபவிக்க எண்ணுகிறார்.ஒரு காலத்தில் குடும்பத் தலைவன் உழைத்து அந்தக் குடும்பத்தைக்காப்பாற்றிய நிலை இருந்தது. அந்தச் சூழலில் குடும்பங்களில் பிரச்னைகள்அதிகம் இல்லை. கூட்டுக் குடும்ப முறை உறவை மேம்படுத்தியது.பள்ளிப் பருவத்தில் தந்தை, மகனுக்கு ஒரு நாயகனாகக் காட்சியளித்தார்.அவன் பருவ வயதை எட்டும் வரை தோழனாகக் காட்சியளித்தார். பின்னர்தந்தையின் ஆலோசனை தனயனுக்கு கசப்பைத் தரும். ஒருத்தியை கரம் பிடித்தபிறகு, தாய், தந்தையின் உதவியை அவன் நாடுவது குறைந்து விடும்.தான் எடுக்கும் முடிவுகள், செயல்களுக்கு தந்தையின் ஆலோசனைபெறவேண்டும் என்ற எண்ணம் அவனிடம் குறைந்து விடுகிறது.இளமைப் பருவத்தை அவன் கடக்கும்போது, தந்தையிடம் ஒரு வார்த்தைகலந்து பேசுவோம், அதன் பிறகு முடிவு எடுப்போம் என்ற எண்ணம்அவனிடம் எழும்போது, அவன் தந்தை இந்த உலகை விட்டுச் செல்லதயாராகியிருப்பார்.குடும்பத்தினரிடையே ஏற்படும் இடைவெளி, அதனால் உருவாகும்மாற்றங்களால் நாளடைவில் உறவுகளுக்கு இடையே பிரச்னைகள் அதிகரிக்கக்காரணமாகிறது.அதுவே உறவுகளுக்கு இடையே மிகப்பெரிய துண்டிப்பை ஏற்படுத்துகிறது.பள்ளிப் பருவத்தில் தந்தையின் செல்லமான கண்டிப்பு, தாயின் அரவணைப்பு,சகோதர சகோதரிகளிடையே இருந்த ஒற்றுமை காரணமாக குடும்பத்தில் பாசம்மேலோங்கி இருந்தது. அந்த ஆனந்தம் இன்று எத்தனை குடும்பங்களில்காணமுடிகிறது.விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை குறைந்து, தான் என்ற எண்ணம்மேலோங்கிய காரணத்தால் உறவுகளுக்கிடையே விரிசல் அதிகரித்துவிடுகிறது.இதனால், நமக்குள் எழும் சின்னச் சின்ன ஆசைகள் கூட நிறைவேறுவதில்லை.நாம், நம் குடும்பம் என விட்டுக் கொடுத்துச் சென்றால் உறவுகள் மேம்படும்,உள்ளமும் மகிழும்.

நன்றி : தினமணி

0 comments: